ஜனாதிபதியின் சகோதரர் வெலி ராஜூ என்ற பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடம் என்றும், தற்போது அவரது தலையில் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியந்த சிறிசேனவை தாக்கியதாக கூறப்படும் லக்மால் துஷான் (வயது 24) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், அவர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
லக்மால் துஷான், வெலி ராஜுவின் நண்பர் என்றும், இருவருக்கும் இடையிலான சொந்தப் பிரச்சினையை அடியொட்டி எழுந்த கோபமே இத்தாக்குதலுக்குக் காரணம் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதுமட்டுமன்றி, வெலி ராஜு, லக்மாலின் பெற்றோரைத் தாக்க முயன்ற சந்தர்ப்பத்திலேயே, கோபமுற்ற லக்மால் கோடாரியொன்றை எடுத்து அவரைத் தாக்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 7.00 மணியளவில் பொலனறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் பிரியந்த சிறிசேன படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த பிரியந்த சிறிசேன பொலனறுவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதலில் அனுமதிக்கப்பட்டு, பின்பு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது பின் தலைப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது தலைப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலநறுவை பகுதியில் சட்டவிரோத மணல் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் சிறிசேன சகோதரர் பிரியந்த சிறிசேன மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதிபர் சிறிசேனவும், இந்த கொள்ளை தொடர்பாக சகோதரரை எச்சரித்திருந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேனவை தாக்கியதாக கூறப்படும் லக்மால் துஷான் (வயது 24) பக்கமுன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், அவர் மேலதிக விசாரணை க்கென பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment