↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் குப்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து நாட்டவர் என்ற சாதனையை பெற்றார். இது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் மேற்கிந்திய தீவுகளை புரட்டியெடுத்த குப்டிலின் இடது காலில் 2 விரல்கள் தான் இருக்கின்றது என்பது பலருக்கும் தெரியாத விடயமாகும்.
குப்டில் தனது 13வது வயதில் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அப்போது இடது காலில் பெருவிரல் மற்றும் அதற்கு அடுத்த விரலை தவிர்த்து பிற மூன்று விரல்களையும் இழந்தார்.
எனவே, `இரட்டை விரல் குப்டில்’ என்றுதான் நியூசிலாந்து வீரர்களால் அவர் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
`விரல்களை இழந்தாலும் அவர் சோர்ந்து போய் விடவில்லை. இன்னும் கடினமாக உழைத்தால், நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து அதை நோக்கி செயல்பட்டார்’ என்று தனது மகனின் மனஉறுதியை பற்றி பெருமையாக பேசுகிறார், அவரது தந்தை பீட்டர் மார்ட்டின்.
அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பையும் தன்வசம் வைத்துள்ள குப்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர்.
இவரது மனைவி பெயர் லாரா மெக்கோல்ட்ரிக். தொலைக்காட்சி தொகுப்பாளரான லாரா, கிரிக்கெட் நிகழ்ச்சி தொடர்பாக குப்டிலிடம் பேட்டி கண்ட போது, அந்த பழக்கம் காதலாக மாறி இல்வாழ்க்கையில் சங்கமித்தது.
அதிரடியில் மிரட்டும் குப்டிலை இதுவரை எந்த ஐ.பி.எல் அணியும் ஏலத்தில் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top