உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஷமி சில்வா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
உலகக்கிண்ண தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இலங்கை அணி, இம்முறை காலிறுதியில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது.
1999க்குப் பின் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறாதது குறித்து ஷமி சில்வா எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவுக்கு எதிராக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் தொடரில், இலங்கை அணி 0–5 என தோற்றது.
இது உலக க்கிண்ண தொடருக்கான உடற்தகுதி முகாமை பெரிதும் பாதித்தது. அரசியல் நெருக்கடி காரணமாக வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அன்னிய பயிற்சியாளர்களின் கீழ் இலங்கை அணி நன்றாகவே செயல்பட்டு வந்த நிலையில், இப்போதைய பயிற்சியாளர் (முன்னாள் வீரர் அட்டபட்டு) தெரிவும் தவறாக இருந்தது.
அணியின் பயிற்சி பணியாளர்களிடம் உட்பூசல் அதிகம் காணப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் இலங்கை அணி விரைவில் நாடு திரும்பியது என்றும் இதுகுறித்து அவசரக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment