குஷ்புவை நடிகை என அழைக்காமல் தேசியத்தலைவி என்று அழைக்குமாறு மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. தெற்கு வட்டாரத்தலைவர் சுப்பாராயலு தலைமை தாங்கினார். நகரத்தலைவர் விநாயகராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயமணி, குருசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தற்போது காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இளங்கோவன் தலைமையேற்ற பின்னர் புதிய எழுச்சி பெற்றுள்ளது. அதேபோல் குஷ்பு காங்கிரஸ் கட்சிக்கு தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் இனிமேல் அவரை காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் நடிகை குஷ்பு என்று கூறக்கூடாது. தேசியத்தலைவி என்றுதான் அழைக்கவேண்டும். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், 108 அவசரஊர்தி, தகவல் அறியும் உரிமை சட்டம், கல்விக்கடன் போன்ற பல்வேறு திட்டங்களை மக்களிடம் முறையாக சேர்க்கப்படாத காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியால்தான் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்ய முடியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளார். ![]() |
குஷ்பு இனி நடிகை இல்லை....தேசியத்தலைவி: தொண்டர்களுக்கு வேண்டுகோள்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.