↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இம்முறை உலக கோப்பை எங்களுக்குதான் கிடைக்கும், அதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை அரையிறுதியில் நாளை, ஆக்லாந்தில் நடைபெற உள்ள முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் நடுவே இன்று, நிருபர்களுக்கு பேட்டியளித்தார், தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ்.

டி வில்லியர்ஸ் கூறியாதாவது: தென் ஆப்பிரிக்க அணி தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. நாக்-அவுட் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற அவப்பெயரை இந்த உலக கோப்பையில் நீக்கியுள்ளோம்.

தென் ஆப்பிரிக்க அணி தனது முழு பலத்தோடு விளையாடினால், அதை எந்த அணியாலும் தடுக்க முடியாது.

உலக கோப்பை தொடர்களில் மட்டும் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக ஆடுவதில்லை என்ற அவப்பெயர் இருந்தது. அத்தனை உணர்ச்சிவசங்களுக்கு நடுவேயும், அதோடு மோதி, அதை ஏர்றுக் கொண்டு, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

பழைய கதைகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அன்றைய போட்டியில் எப்படி விளையாடுகிறோமோ அதைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கையுள்ளது.


உலக கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்கா இதற்கு முன்பு பல சோதனைகளை சந்தித்துள்ளது. ஆனால் இம்முறை நாங்கள் முழுக்க ப்ரெஷ்ஷாக உள்ளோம். நாளைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளோம்.

நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயத்தால் விலகியிருப்பது அவர்களுக்கு பெரும் இழப்புதான். ஆனால், என்னைப் பொறுத்தளவில், பிற அணிகளின் நிறை, குறைகளை அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் விருப்பமில்லை. எங்கள் அணி எப்படி விளையாடுகிறது என்பது மட்டுமே எனக்கு முக்கியம். தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக ஆடினால், கண்டிப்பாக வெற்றி எங்களுக்குதான் கிடைக்கும். இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்தார். இதனிடையே காயத்தால் அவதிப்பட்ட தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிளாண்டர் குணமடைந்து, பயிற்சியில் ஈடுபட்டார்.

பிளாண்டரை அணியில் சேர்ப்பதற்காக காலிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து கைல் அப்பாட் கழற்றி விடப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறிதித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், காலிறுதியில் அப்படி ஒரு அபார வெற்றி பெற்ற பிறகு, அணியை மாற்றம் செய்வது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top