2011ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்த மட்டையை வைத்து தான் டோனி இந்திய அணிக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்தார்.
இந்த மட்டை கடந்த 2011ம் ஆண்டு யூலை 18ம் திகதி 1 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் மூலம் விற்பனையானது. தற்போது டெல்லி பெங்காலி மார்க்கெட்டில் இதை காட்சிக்கு வைத்துள்ளனர்.
தற்போது இதன் மதிப்பு ரூ. 1 கோடியாகும். இந்த மட்டையை அமித் பக்சன்டல்கா என்பவர் ஏலம் மூலம் வாங்கினார். அந்த மட்டையில் டோனியின் ஆட்டோகிராப்பும் அடங்கியுள்ளது.
இது விற்பனையான போது லிம்கா புத்தகம் மற்றும் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதே போல சச்சின் டெண்டுல்கர் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடிய போது போட்டிருந்த ஜெர்சி தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது.
ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் நடந்த ஏலத்தின்போது அவரின் சட்டை ரூ. 6 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. பிரபலமான கிறிஸ்டி நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.
சிவ் ராஜ் சிங் இந்த சட்டையை ஏலம் எடுத்தார். இவர் ஜோத்பூர் மன்னர் 2ம் கஜ் சிங் வழி வந்தவர் ஆவார்.
2013ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியுடன் சாதனைகளுக்கு விடைகொடுத்தார் சச்சின்.
0 comments:
Post a Comment