↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய ‘மோஹாக்’ஹேர் ஸ்டைலில் களமிறங்கிய ஜடேஜா ஐ.பி.எல் தொடரில் வேறு பாணியில் தலைமுடியை அலங்காரம் செய்ய முயற்சிக்கலாம்.
சுழலில் அசத்திய அஸ்வின் அடுத்த 11 நாட்களில் தொடங்கவிருக்கும் 8வது ஐ.பி.எல்., தொடர் போட்டிக்கு தயாராகலாம்.
தோல்வி குறித்து ரெய்னாவுக்கு யோசிக்க நேரம் இருக்காது. ஏனெனில், ஏப்ரல் 3ல் இவருக்கு திருமணம். புது மாப்பிள்ளையாகும் ரெய்னா, 8வது ஐ.பி.எல். தொடரில் களமிறங்குவார்.
தவான் மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாது என்றாலும், அங்குள்ள மாமனார் வீட்டில் சில நாட்கள் தங்கி விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
முத்தரப்பு தொடரின் போது அணித்தலைவர் டோனிக்கு பெண் குழந்தை பிறந்தது. இனியும் காத்திருக்கத் தேவையில்லை என்பதால், உடனடியாக ராஞ்சி சென்று குழந்தையை கொஞ்சலாம்.
கோஹ்லியின் காதலியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, இருவரும் அவுஸ்திரேலியாவில் தான் உள்ளார். எனவே இவரும் சேர்ந்து அவுஸ்திரேலியாவில் ‘ஷாப்பிங்’ செய்யலாம் அல்லது ஒன்றாக கூட தாயகம் திரும்பலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top