உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் புது வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க கோரி ஆக்ரா நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் என்பவர் உள்ளிட்ட 6 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், தாஜ்மஹால் இருக்கும் இடம் முற்காலத்தில் கல்லறையாக இருந்ததில்லை, அங்கு சிவன் கோவில் மட்டுமே இருந்தது. அந்த இடத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கியுள்ளார். எனவே மீண்டும் இந்துக்கள் அங்கே சிவ வழிபாடு நடத்த அனுமதி தரவேண்டும்.ஒருபோதும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. |
தாஜ்மஹாலில் இந்துக்கள் வழிபாடு...சிவன் கோவிலாக அறிவிக்க கோரி வழக்கு!
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment