↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தேனி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது காதலி இறந்த இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெஞ்சை நெகிழவைத்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவிலை சேர்ந்த சுந்தரம். என்பவரது மகன் ஆனந்தகுமார் ( 26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரும், மேக்கிலார்பட்டியை சேர்ந்த வாசி என்பவரின் மகள் ஜெயமாலா (20) என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6ம் திகதி இருவரும் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடையை கடந்து சென்றபோது, நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் ஜெயமாலாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, உடனடியாக அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 12ம் திகதி ஜெயமாலா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து ஜெயமாலாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில், ஆனந்தகுமாரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த அவர், காதலி இறந்ததால் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை காதலியை விபத்தில் பறிகொடுத்த இடத்திற்கு சென்ற ஆனந்தகுமார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top