உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் எதிர்வரும் 26ம் திகதி சிட்னியில் மோதவுள்ளன.
இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்காக இரு அணிகளும் பல்வேறு வியூகங்களை தீட்டி வருகிறது.
இந்நிலையில் சிட்னி ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் அதிகமான புற்களுடன் இருக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல் கருத்து வெளியிடுகையில்,
அரையிறுதியின் போது வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் கிடைக்கும் என்று நம்புகிறோம். அதற்கு ஏற்ற வகையில் ஆடுகளத்தில் கொஞ்சம் புற்களை விட்டு வைப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.
இந்த ஆண்டில் சிட்னி மைதானம் மிகச்சிறப்பானதாக இருந்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், ஹாஸ்லேவுட், பவுல்க்னெர், ஷேன் வாட்சன் என்று அவுஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சு பட்டாளம் அணிவகுத்து நிற்பதால் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிட்னி ஆடுகளம் எப்போதுமே சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடியது. இந்தியர்கள் சுழலில் மிரட்டக்கூடியவர்கள் என்பதால் அவுஸ்திரேலிய முகாமில் ஒரு வித பதற்றமும், பயமும் இருப்பதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment