↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா ரன்களை எடுப்பதற்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. 22 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை எடுத்துள்ளது தென்னாப்பிரிக்கா. டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. முதல் 5 ஓவர்களில் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணி பந்துவீச அழைக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுமே இதுவரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது கிடையாது. முதல் முறையாக இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் இன்று கடுமையாக போராட இருக்கின்றன.
நியூசிலாந்து அணி 7வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறது. இதுவரை ஆடிய 6 அரை இறுதியில் தோற்று இருந்தது. தற்போது சொந்த மண்ணில் 26 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நியூசிலாந்து அணி அரை இறுதியில் களமிறங்கி உள்ளது.
தென்னாப்பிரிக்கா இதுவரை 2 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. ஆனால் ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு சென்றதில்லை. 1992ல் மழை விதியால் இங்கிலாந்திடம் தோற்றது. 1999ல் ஆஸ்திரேலியாவுடன் மோதிய ஆட்டம் டையில் முடிந்தது. இதனால் இம்முறை எப்படியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணி பந்து வீச அழைக்கப்பட்டுள்ளது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» உலகக் கோப்பை அரை இறுதி: நியூசி.யுடன் மல்லுகட்டும் தெ.ஆப்பிரிக்கா- 22 ஓவர்கள் முடிவில் 88/2
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment