↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ஆளும் சுதந்திர கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் 1951-ம் ஆண்டில் இருந்து தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2010-ம் ஆண்டு ராஜபக்சே அரசு தடை விதித்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழிலும் தேசிய கீதத்தை பாட அதிபர் மைத்ரிபால சிறிசேன ஒப்புதல் அளித்தார்.
இந்த முடிவுக்கு ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் இலங்கை ராணுவத்தின் மூத்த கமாண்டராக பதவி வகித்தவருமான சரத் வீரசேகரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேசிய கீதம் நாட்டின் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மைத்ரிபாலவின் இந்த முடிவு வெறும் 20 லட்சம் தமிழரர திருப்திபடுத்தும் செயலாகும். இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், அங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்றார். அதே நேரத்தில் தமிழில் தேசிய கீதம் பாடுவதை அனுமதிப்பதில் தவறில்லை என முன்னாள் மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நானயக்காராவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Home
»
news
»
news.srilanka
» இந்தியாவிலேயே தமிழில் தேசிய கீதம் பாடலை.. இங்க எதுக்கு? இலங்கை ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment