ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
தற்போது ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஷியா பிரிவினரின் வழிபாட்டு தலங்களை குண்டு வைத்து தகர்த்து அழித்துள்ளனர்.
இந்த அழிக்கப்பட்ட தேவாலயங்கள் 4ம் நூற்றாண்டில் அசிரியன் மன்னரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னங்கள் என கூறப்படுகிறது.
மேலும் ஷியா பிரிவினரின் மசூதியை தகர்த்த தீவிரவாதிகள் அந்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தீவிரவாதிகள் கூறியதாவது, எங்களது நாடுகளான சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் மேற்கத்திய கலாசாரத்தை இறக்குமதி செய்ய நாங்கள் விரும்பாததால், இவற்றை அழித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஈராக்கின் மொசூல் நகரில் வரலாற்று சிறப்பு மிக்க நூல்நிலையம் மற்றும் அருங்காட்சியகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நாங்கள் அபாய நிலையில் இருக்கிறோம் என்றும் எங்களின் கலாசாரம் மற்றும் உரிமைகளை பாதுகாத்து தாருங்கள் எனவும் அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் உலகநாடுகளை வலியுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment