அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சன்னிவேல்(Sunnyvale) நகரத்தை சேர்ந்தவர் அனாலிசா ஹாக்குல்மேன்(Annalisa Hackleman Age-36).
இவருக்கு 13 வயதான போது, polycystic ovarian syndrome என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவரது உடலில் அளவுக்கு அதிகான முடி வளர்ச்சி காணப்பட்டது. மேலும் உடல் மட்டுமின்றி ஆண்களை போல் தாடியும் அவருக்கு வளர தொடங்கியது.
இந்நிலையில் தாடியுடன் வெளியில் செல்லும்போது பல பேர் அவரை கிண்டலடிக்கும் விதித்தல் பேசியதால் அவமானத்தில் வேதனை அடைந்துள்ளார்.
இளம்வயதில் சில முறை தாடியை நீக்கியதும், அது வேகமாக வளர தொடங்கியது. இதனை தொடர்ந்து, தாடியை நீக்குவதை அடியோடு விட்டுவிட்டு, அதை வளர்க்க தொடங்கினார்.
தற்போது ஐந்தாவது திருமண நாளை கொண்டாடும் இவர், தனது நீண்டகால தாடியை நீக்க முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 5 வருடங்களாக என்னுடைய தாடியை பற்றி தனது கணவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் என்னிடம் மிகுந்த அன்பு செலுத்திவருகிறார்.
ஆனால், அவர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தாலும் கூட எனது நிலை அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக நான் எண்ணுகிறேன்.
எனவே பல வருடங்களாக வளர்த்து வந்த தாடியை எனது கணவருக்காக நீக்க உள்ளேன்.
ஏனெனில் ஜோடியாக வெளியே செல்லும்போது தன் தாடியை பார்த்து பலர் கிண்டலடிப்பதை கணவர் விரும்பவில்லை என்றும் அவருக்கு ஒரு அழகான முழுப்பெண்ணாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளதால் தனது தாடியை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment