வருகின்ற 26ம் திகதி இந்தியா- அவுஸ்திரேலியா மோதும் உலகக்கிண்ண கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுபோட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது.
இதில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் சிட்னி மைதானம், இந்திய பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணி கருதுகிறது.
இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே சர்வதேச கிரிக்கெட் வாரியம் இந்த மைதானத்தை தெரிவு செய்துள்ளதாக அவுஸ்திரேலிய அணி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சிட்னி மைதானத்தின் பிட்ச், அவுஸ்திரேலிய வீரர்களுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், இந்திய சுழற்பந்து வீரர்களுக்கு அது சாதகமாக அமையும் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
0 comments:
Post a Comment