உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இந்தியா, வருகின்ற 26ம் திகதி சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலியாவை சந்திக்கிறது.
இந்நிலையில், இந்த மோதல் குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா கூறுகையில், சிட்னி மைதானம் சுழற்பந்துக்கு சாதகமான மைதானமாகும்.
இதே மைதானத்தில் தான் இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும், டுமினி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அவுஸ்திரேலியா, எப்போதுமே சுழற்பந்து வீச்சில் திணறும் ஒரு அணியாகும். எனவே, சுழற்பந்து என்னும் ஆயுதத்தால், அவுஸ்திரேலியாவை, இந்தியா கட்டுப்படுத்த முடியும்.
இந்த உலகக்கிண்ணத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே, சிறப்பாக விளையாடி வருவதால், இந்த மோதல் கடுமையானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சாளருக்கு கைகொடுப்பது போல துடுப்பாட்டக்காரர்களுக்கும் சொர்க்கபுரியாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment