↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான அரை இறுதிப் போட்டியில் நிச்சயம் இந்தியாதான் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். ஆனால் கிரிக்கெட் புக்கிகள் மட்டத்திலோ, ஆஸ்திரேலியாவுக்குத்தான் அமோக ஆதரவு காணப்படுகிறதாம்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடர் பல வகையிலும் பல வரலாறுகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. நடப்புச் சாம்பியன் இந்தியா, இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வென்று வலுவான நிலையில் அரை இறுதிக்குள் புகுந்துள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலியா சற்று தடுமாறி அரை இறுதிக்குள் வந்துள்ளது. 2 போட்டிகளில் அது எதிரணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்துள்ளது.
பல்வேறு காரணங்களையும், புள்ளி விவரங்களையும், தற்போதைய வீரர்களின் ஆட்டத்திறனையும் வைத்து இந்தியாவே வெல்லும் என்று பல்வேறு தரப்பினரும் நம்பிக்கையோடு கூறுகின்றனர். ஆனால் சூதாட்டக்காரர்கள் மத்தியில் ஆஸ்திரேலியா பக்கம்தான் ஆதரவு அமோகமாக உள்ளது.
மார்ச் 26ம் தேதி சிட்னியில் நடைபெறப் போகும் அரை இறுதிப் போட்டியில் நிச்சயம் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று அவர்கள் பெருவிரலை உயர்த்திக் காட்டுகின்றனர்.
பாகிஸ்தானை ஆஸ்திரேலியா அபாரமான முறையில் வீழ்த்தியதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாம். அதாவது ஆஸ்திரேலியா வெல்லும் என்று 66.6 சதவீத ஆதரவு காணப்படுகிறதாம். இந்தியாவின் வாய்ப்பு 33.3 சதவீதமாக உள்ளதாம்.
இதற்கு புக்கிகள் சொல்லும் காரணம்... இந்தியா பிற அணிகளை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரை அது 2-0 என்ற கணக்கில் இழந்தது. முத்தரப்புத் தொடரிலும் அது படுதோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வெற்றியைக் கூட இந்தியா பெறவில்லை என்று புக்கிகள் கூறுகிறார்கள்.
அரை இறுதிக்கு தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன. புக்கிகள் மத்தியில் ஆஸ்திரேலியாவை கோப்பையை வெல்லும் என்று ஆதரவு காணப்படுகிறதாம். 2வது சான்ஸ் நியூசிலாந்துக்கு உள்ளதாம். 3வது வாய்ப்பில்தான் இந்தியா உள்ளதாம். பார்க்கலாம்.. சூதாட்டம் வெல்லுமா அல்லது இந்தியா வெல்லுமா என்று!
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» நமக்கு இந்தியா "பேவரைட்"டாக இருக்கலாம்... ஆனால் "புக்கி"கள் மத்தியில் ஆஸி.க்குதான் அமோக ஆதரவு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment