தென்கிழக்கு மெக்சிகோவின் ஹுமிங்கலோ(Huimanguillo) என்ற பகுதியில் உள்ள பள்ளிக்கு லெயிலா பரிடேஸ்(Laelia Paredes Age-35) என்ற பெண் ஒருவர் வந்துள்ளார்.
மிகுந்த ஆத்திரத்துடன் வகுப்பறை ஒன்றில் நுழைந்த அவர், அங்கிருந்த மார்செல்லா(Marcella Age-32) என்ற ஆசிரியையை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அவர் தாக்குதலில் ஈடுபட்டபோது, தன் கணவருடன் அந்த பெண் கள்ள உறவு கொண்டதை கூறி திட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை பார்த்த மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இறுதியில் ஆசிரியையை அவர் காலால் நன்றாக மிதித்து விட்டு அவ்விடத்திலிருந்து அகன்றுள்ளார்.
பெண்ணின் இச்செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment