↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் போராடிய தென்னாப்பிரிக்கா அதன்பிறகு அதிரடி காண்பித்து, நியூசிலாந்தை திணறடித்த நிலையில் மழையால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய முதலாவது அரை இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் அம்லா, டீ காக் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நியூசிலாந்து அணியின் சவுதி, பவுல்ட் ஆகியோர் தொடக்கம் முதலே நேர்த்தியான பந்து வீச்சை மேற்கொண்டனர்.
3.4வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆம்லா விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் 14 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். களத்தில் இருந்த டீ காக்குடன் டூபிளிஸ்சிஸ் இணைந்து கொண்டார். ஆனால் டீ காக்கும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 7.5வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 31 ரன்களை எடுத்த நிலையில் டீ காக் அவுட் ஆனார். அவர் 17 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்தார்.
பின்னர் டுபிளிஸ்சிஸூடன் ரோசவ் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். 25 ஓவர்கள் முடிவில் ஒருவழியாக 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா. இருப்பினும் 26.1வது ஓவரில் ரோசவ் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது தென்னாப்பிரிக்கா 114 ரன்களை எடுத்தது.
ஆனால் அதன்பிறகுதான் ஆட்டத்தின் போக்கே மாறியது. கேப்டன் டி வில்லியர்ஸ் களமிறங்கி, பவுண்டரியும், சிக்சருமாக வெளுக்க ஆரம்பித்தார். பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்த டுப்ளசிசும் பொங்கி எழுந்து அடித்தார்.
இதனால் 38 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 216 ரன்களை எடுத்தது. ஆனால், தென் ஆப்பிரிக்காவின் ராசியோ என்னவோ தெரியவில்லை, திடீரென வானம் பொத்துக்கொண்டு மழை ஊற்ற ஆரம்பித்துவிட்டது. எனவே ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டுபிளசிஸ் 82 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 38 பந்துகளில் எடுத்த 60 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» தென் ஆப்பிரிக்காவுக்கு வந்த சோதனை.. அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment