↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியா- வங்கதேச போட்டியின்போது வெடித்த நோ-பால் சர்ச்சையை தொடர்ந்து, உலக கோப்பை அரையிறுதி போட்டிகளுக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச நடுவர் அலீம்தார் இடம்பெறவில்லை.
இந்தியா-வங்கதேசம் நடுவேயான காலிறுதி போட்டியின்போது, இந்திய தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வங்கதேச பவுலர் ருபேல் பந்தில், பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்தார். ஆனால், லெக் அம்பயராக நின்று கொண்டிருந்த அலீம்தார், அந்த பந்து இடுப்புக்கு மேலே வீசப்பட்டதால், நோ-பால் என்று அறிவிக்குமாறு, அம்பயர் இயான் கவுல்ட்டுக்கு சைகை செய்தார்.
அதையேற்று கவுல்டும் நோ-பால் வழங்கினார். ஆனால், டிவி ரிப்ளேயில், அது முட்டி உயரத்துக்கு வந்த பந்துதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கதேசத்தில், ஐசிசிக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. வங்கதேசத்தை சேர்ந்த அமைச்சரும், ஐசிசி தலைவருமான, முஸ்தபாவும், இந்தியாவின் நெருக்கடியால் ஐசிசி நடுவர்கள் அந்த நாட்டுக்கு ஆதரவு கரம் நீட்டுவதாக குற்றம்சாட்டினார்.
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, அரையிறுதி போட்டிகளுக்கான நடுவர் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. 24ம் தேதி ஆக்லாந்தில், தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடக்க உள்ள போட்டிகளுக்கான அம்பயர்கள் விவரம் இதுதான்: டேவிட் பூன் (போட்டி ரெப்ரி), இயான் கவுல்ட் மற்றும் ராட் டக்கர் (கள நடுவர்கள்), நிகேல் லியாங் (மூன்றாம் நடுவர்), புரூஸ் ஆக்சன்போர்ட் (நாலாம் நடுவர்).
26ம்தேதி நடைபெறும், இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கான நடுவர்கள் விவரம் இதுதான்: ரஞ்சன் மதுகலே (போட்டி ரெப்ரி), குமார் தர்மசேனா மற்றும் ரிச்சர்ட் கேட்லிபோரா (கள நடுவர்கள்) மாராய்ஸ் எராஸ்மஸ் (மூன்றாம் நடுவர்) ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (நாலாம் நடுவர்) .
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கு அம்பயர்கள் பெயர் அறிவிப்பு! 'நோ-பால்' அலீம்தார் மிஸ்சிங்!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment