உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தி கிண்ணம் வெல்லும் என்று புக்கிகள் கணித்துள்ளதாக பரவி வரும் பேஸ்புக் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இது போன்ற ஒரு வதந்தி வாட்ஸ் ஆப்பில் வலம் வந்தது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புக்கிகள் கணித்துள்ளதாக, தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல் அரையிறுதி:-
முதல் அரையிறுதியில் மோதும் நியூசிலாந்து 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்கும்.
இதைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா 186 ஓட்டங்களில் ஆட்டமிழக்கும். நியூசிலாந்து 36 ஓட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
இரண்டாவது அரையிறுதி:-
இரண்டாவது அரையிறுதியில் இந்தியா 50 ஓவர் முடிவில் 309 ஓட்டங்களை எடுக்கும். இதைத் தொடர்ந்து விளையாடும் அவுஸ்திரேலியா 215 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்கும்.
இந்தியா 94 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
உலகக்கிண்ண இறுதிப் போட்டி:-
இறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் இந்தியா 310 ஓட்டங்கள் எடுக்கும். நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 297 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கும்.
20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தை தக்க வைக்கும். விராட் கோஹ்லி 142 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பார். அவர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்படுவார்.
தொடர் நாயகனாக இந்தியாவின் முகமது ஷமி தெரிவு செய்யப்படுவார். இவர் 24 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தைப் பிடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment