உலகக்கிண்ணத் தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், அதிரடியில் அசத்திய ரோஹித் சர்மா சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இது குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான இயன்சேப்பல் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
வங்கதேசத்துக்கு எதிரான காலிறுதியில் இந்திய வீரர் ரோஹித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது.
இவரது ஆட்டம் 1996ம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை வீரர் அரவிந்த் டிசில்வாவை நினைவுப்படுத்தும் வகையில் பிரமாதமாக இருந்தது.
டிசில்வா உறுதியுடன் விளையாடி சதம் அடித்து இலங்கை கிண்ணம் வெல்ல உதவியாக இருந்தார். இதே மாதிரியான ஆட்டத்தைதான் ரோஹித் சர்மா வெளிப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய வீரர்களின் பந்துவீச்சு நம்ப முடியாத அளவுக்கு மேம்பட்டு உள்ளதாகவும், 7 ஆட்டத்தில் 70 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது பாராட்டுக்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.