உலகக்கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோலி, அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்த உலகக்கிண்ணத் தொடரில் கோஹ்லி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரது தடுமாற்றம் குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை பார்த்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எப்போதுமே பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் குவிப்பார்கள். நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய துடுப்பாட்டக்காரர் கோஹ்லி.
விராட் கோஹ்லியின் துடுப்பாட்டம் ஒன்றும் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாமல் அவர் அதிக ஓட்டங்களை குவித்து இருக்கிறார்.
நடப்பு உலகக்கிண்ண தொடரில் அவர் ஆட்டமிழந்தது எல்லாம் மோசமான ஷாட்டுகளால் தான் என்று நான் கருதவில்லை.
அதே போல் அவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment