↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள பாபநாசம்', விஸ்வரூபம்' படங்களும் எந்த  நேரத்திலும் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், வந்தான் வென்றான், நிமிர்ந்து நில் ஆகிய படங்களை தயாரித்த வாசன் விஷுவல் வெண்ட்சர்ஸ் (Vasan Visual Ventures) என்கிற நிறுவனம் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

பிரபுதேவா ஏற்கனவே கமல்ஹாசனுடன் 'காதலா காதலா' என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கமல்ஹாசன் மொரீஷியஸ் தீவுக்கு லொகேஷன் பார்க்க சென்றது இந்த படத்திற்குத்தானா? என்பது விரைவில் தெரியவரும். இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top