↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகை நயன்தாரா வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ் - Cineulagam
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நீலகரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் சாலையில் 'ராயல் காஸ்டில்' என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 142 வீடுகள் உள்ளன.
இதில் நயன்தாரா மற்றும் நடிகர் ஜெயராம் வீடுகளும் அடங்கும், இது மட்டுமில்லாமல் பல திரைப்பிரபலங்களின் வீடுகள் உள்ளதாம்.
இவர்கள் அனைவருக்கும் ஒரு சில தினங்களுக்கு முன் ஜப்தி நோட்டீஸ் வந்துள்ளது. நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், ஊட்டியில் வீடுகளை வாங்கியுள்ள சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பெரிய செல்வந்தர்கள் பலர், சொத்து வரி பாக்கி வைத்துள்ளனர்.இதனால் நகராட்சி 100-சதவீத வரி வசூலை எட்ட முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ள‌னர்.
மேலும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அவர்கள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் 'ஜப்தி' நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top