↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அருண் விஜய்யை வாழ்த்தி கடிதம் எழுதிய அஜித்தின் மகள் - Cineulagam
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகத்தினரிடம் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுள்ள அருண்விஜய், தற்போது ஒரு வி.ஐ.பியிடம் இருந்தும் பாராட்டு கடிதம் வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை. அஜீத்தின் ஏழு வயது மகள் அனோஷ்காதான். என்னை அறிந்தால்' படத்தின் பிரிவியூ ஷோ பார்த்து முடித்தவுடன் அருண்விஜய்யை சந்தித்த அனோஷ்கா, ஒரு கடிதத்தை கொடுத்ததாகவும், அந்த கடிதத்தில் 'முதல்முறையாக வில்லன் வேடத்தில் நடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.
இந்த படத்தில் நீங்கள் நடித்த காட்சிகளை நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் உங்கள் நடிப்பு அற்புதம். என் தந்தையுடன் நடித்ததற்கு நன்றி' என்று எழுதியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top