↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்.’ இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.மேலும் படிக்க ...
கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி மற்றும் பூனம் பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மேலும் வம்சி கிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குநர் லட்சுமணிடம் கேட்கும் போது “ரோமியோ ஜூலியட்’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜெயம்ரவி – ஹன்சிகா பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
படு ஜாலியான இளமை துள்ளல் படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மாதிரியான காமெடி இதில் இருக்கிறது. இமானின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் இனிமையாக உள்ளன. இந்த பாடல்கள் மூலம் இமானுக்கு ஹிந்தி திரையுலகில் நுழையும் வாய்ப்புள்ளது. என்றார் இயக்குனர் லட்சுமண்.
வசனம் – சந்துரு, இசை – D.இமான், தயாரிப்பு – எஸ். நந்தகோபால், கதை, திரைக்கதை, இயக்கம் – லட்சுமண்.
ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் டீசர் வெளியீடு:-
‘ரோமியோ ஜூலியட்’ – திரைப்படத்தின் டீசர்…!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top