↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் வழக்கம் அடிக்கடி நடக்கும். ஆனால் கோலிவுட்டில் இரண்டு பெரிய நடிகர்கள் நடிக்கும் படம் எப்பொழுதாவதுதான் வரும். ஆனால் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் ஒரே படத்தில் பணிபுரிவது தற்போது கோலிவுட்டில் அதிகமாக நடைபெறுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், விஜய் ஆண்டனி போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அனிருத், இமான் இசையில் ஒரு பாடலை தற்போது பாடியுள்ளார். அதுவும் அவர் பாடியது ஒரு கானா பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லட்சுமண் இயக்கி வரும் ரோமியோ ஜூலியட் படத்தில் இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என இமான் முடிவு செய்து அனிருத்தை அணுகியபோது அனிருத் உடனே வந்து பாடிக்கொடுத்துள்ளார்.
 
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top