கமலின் உத்தம வில்லன் படத்தின் இறுதி மிக்சிங் பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பாராமவுண்ட் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. கமல் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்ததால் பாலசந்தரின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது.
![Uthama Villan, உத்தம வில்லன், கமல்](http://media.webdunia.com/_media/ta/img/article/2014-06/23/full/1403517818-9996.jpg)
தற்போது இறுதி மிக்சிங் முடிந்துள்ளது. ஏற்கனவே படத்தின் ட்ரெய்லரையும் தயார் செய்துவிட்டனர். மிக விரைவில் ட்ரெய்லர் வெளியிடப்படும் என கமல் கூறியுள்ளார்.
ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இந்தப் படம்தான் விஸ்வரூபம் 2, பாபநாசம் படங்களுக்கு முன்னால் திரைக்கு வரவிருக்கிறது.
0 comments:
Post a Comment