ராஜேஷ் இயக்கிய முதல் படம் சிவா மனசுல சக்தி. வெற்றிப் படமாக அமைந்ததுடன், 'மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்' டயலாக் தமிழக குடிகாரர்களின் மந்திரச் சொல்லானது.
சிவா மனசுல சக்திக்குப் பிறகு, ராஜேஷின் இரண்டாவது படம் பாஸ் என்கிற பாஸ்கரனில் கௌரவ வேடத்தில் ஒரேயொரு காட்சியில் மட்டும் நடித்தார் ஜீவா. இவர்கள் இந்த வருடம் மீண்டும் ஒன்றிணைகிறார்கள்.
தற்போது ராஜேஷ், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தை ஆர்யா, சந்தானத்தை வைத்து எடுத்து வருகிறார். இதையடுத்து அவர் ஜீவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். 2015 இறுதியில் இவர்கள் இணையும் படம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஜீவா, ராம்நாத் இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment