இதனையடுத்து இவ்விபத்திற்கு விமானியே காரணம் என அவுஸ்திரேலிய வல்லுநர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து மற்றொரு வல்லுநர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, QZ.8501 விமானத்தை அதன் விமானி இரியாண்டோ அவசர காலத்தில் கடலில் செய்யப்படும் லேண்டிங்கை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும், பெரிய கடல் அலைகளால் விமானம் விபத்துக்குள்ளாயிருக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் மோசமான வானிலையின் பிடியில் விமானம் இருக்கும் போது விமானியால் 162 பேரையும் காப்பாற்ற எதுவும் செய்ய முடியாது என போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே அதில் உள்ள முக்கியத் தரவுகளை வைத்து விமானம் கடலில் விழுந்ததற்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment