↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிக்கும் நோக்கில் இறந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு விபத்தில் இறந்த வாலிபருக்கு தனியார் மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரமணா பட பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த வாலிபர் அஜீத்குமார். சாலை விபத்தொன்றில் படுகாயம் அடைந்த அஜீத்குமார் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அஜீத்குமார் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், அஜீத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என ஏமாற்றி மருத்துவமனை நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணத்தை அவரது பெற்றோரிடம் கட்டச் சொல்லியுள்ளது. அவர்களும் அதன்படி பணம் கட்டியுள்ளனர். பின்னர், திடீரென அஜீத்குமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அங்கு கொண்டு செல்லப்பட்ட அஜீத்குமார் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த அஜீத்குமாரின் உறவினர்கள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அஜீத்குமார் உயிர் இழந்ததை மறைந்து தனியார் மருத்துவமனை சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப் பட்டது. 

இதையடுத்து, மருத்துவமனையின் நிறுவனர் மலர்மன்னனை போலீசார் கைது செய்தனர். ரமணா பட பாணியில், தனியார் மருத்துவமனை ஒன்று பணத்தை வாங்கிக் கொண்டு இறந்தவருக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top