விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்த பிபாஷா பாசு, பாலிவுட்டில் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கிறங்கிகடித்து கொண்டிருப்பவர். இவர் சமீபத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டார்.
அவரிடம் பிரபல பாலிவுட் நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களுக்கு மார்க் போடும்படி கேள்வி ஒன்று கேட்கப்பட்டதில் அவர் பல நடிகர்களுக்கு தன்னுடைய மார்க்கை வழங்கிவந்தார். இந்நிலையில் பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாம் பெயர் வந்தபோது சற்று கோபமாக 'யார் இவர்? என்று எதிர்க்கேள்வி கேட்டு கேள்வி கேட்டவரை திணற அடித்தார். ஜான் ஆபிரஹாம் மற்றும் பிபாஷா பாசு இருவரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் கடந்த 2011 ஆம் ஆண்டு பிரேக் அப் ஆனதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிபாஷா பாசு தற்போது 'அலோன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகளை பிபாஷா விறுவிறுப்புடன் செய்து வருகிறார். |
சச்சின் நாயகியின் அதிரடி எதிர்க்கேள்வி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment