* டெஸ்டில் இலங்கையின் சங்கக்காரா வங்கதேசத்திற்கு எதிராகவும் (319 ஓட்டங்கள்), நியூசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் இந்தியாவுக்கு எதிராகவும் (302 ஓட்டங்கள்) முச்சதத்தை பதிவு செய்துள்ளனர்.
* சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை பொறுத்தவரை 24 ஆட்டங்களில் 14ல் வெற்றியும், 8ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. இன்னொரு ஆட்டத்தில் முடிவில்லை. இதில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா 264 ஓட்டங்கள் (இலங்கைக்கு எதிராக) குவித்து புதிய வரலாறு படைத்தது முக்கிய அம்சமாகும்.
* டி20 கிரிக்கெட் போட்டிகள் மொத்தம் 61 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக அவுஸ்திரேலிய அணி 13 ஆட்டங்களில் ஆடி 9ல் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணி 2014ம் ஆண்டில் 7 ஆட்டங்களில் விளையாடி 5ல் வெற்றி பெற்று, 2ல் தோல்வியை தழுவி இருக்கிறது. இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹாலசும் (116 ஓட்டங்கள்), பாகிஸ்தானின் அகமது ஷேசாத்தும் (111 ஓட்டங்கள்) டி20 போட்டியில் சதம் அடித்த நாயகர்கள் ஆவர்.
* 2014ம் ஆண்டில் டெஸ்டில் நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லமும் (33 சிக்சர்), ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சனும் (27 சிக்சர்), டி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லும் (16) அதிக சிக்சர்கள் விளாசியவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment