பாலசந்தரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்ற நடிகர் கமல்ஹாசன், பாலசந்தர் விட்டுச் சென்ற பணிகளை அவரது மகனாக இருந்து தொடர்ந்து மேற்கொள்வேன் என்றார்.
தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்பட்ட கே.பாலசந்தர் டிசம்பர் 23 -ஆம் தேதி காலமானார். அப்போது உத்தம வில்லன் படத்தின் பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார் கமல். அவரால் பாலசந்தரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
உத்தம வில்லன் பணிகள் முடிந்து சென்னை திரும்பிய கமல், பாலசந்தரின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்தார். பிறகு திரண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
"இன்றைய இளைஞர்களும் வியக்கும்வண்ணம் படங்களை இயக்கியவர் பாலசந்தர். அவர் இயக்கி 30 படங்கள் பலரால் விமர்சிக்கப்பட்டிருந்தாலும், 70 படங்கள் பாராட்டுக்குரியவையாக இருந்தன. கவிதைக்கு எவ்வாறு பாரதியை உவமையாக கூறுகிறோமோ, அதேபோல் சினிமாவுக்கு பாலசந்தர். அவர் விட்டுச் சென்ற பணிகளை அவரது மகனாக தொடர்ந்து மேற்கொள்வேன்" என்று கமல் கூறினார்.
0 comments:
Post a Comment