↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆமீர் கானின் பி.கே. படத்தில் ஆன்லைனில் டவுன்லோடு செய்து பார்த்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஆமீர் கான் நடிப்பில் வெளியான பி.கே. படம் ரிலீஸான 13 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.263 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து தனது அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுகையில் பி.கே. பற்றியும் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், 
பி.கே. படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று பலர் என்னிடம் பல நாட்களாக தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தை டவுன்லோடு செய்தேன். ஆனால் நேற்று இரவு தான் படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. படத்தை பார்த்த உடனேயே மிகவும் பிடித்துவிட்டது. 

அப்போதே படத்திற்கு வரி விலக்கு அளித்து பலர் பார்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன் என்றார். திருட்டு டிவிடிக்கு எதிராக நடிகர், நடிகைகள் குரல் கொடுக்கையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் புதிய படத்தை டவுன்லோடு செய்தது பற்றி பலர் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top