↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கடந்த 30ம் திகதி திடீரென்று ஓய்வு பெற்று விட்டார். இதைத் தொடர்ந்து துணை அணித்தலைவராக செயல்பட்ட விராட் கோஹ்லி இந்திய அணியின் புதிய டெஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் காலியாக உள்ள இந்திய டெஸ்ட் அணியின் துணை அணித்தலைவர் பொறுப்புக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த விடயத்தில் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரியிடம் இருந்து எத்தகைய பதில் கிடைக்கும் என்பது சுவாரஸ்யமான ஒரு விடயமாக இருக்கும்.
துணை அணித்தலைவரை தெரிவு செய்வதில் ரவிசாஸ்திரியின் யோசனை முக்கிய பங்கு வகிக்கும். இப்போதைக்கு ரஹானே மற்றும் அஸ்வின் ஆகியோரில் ஒருவருக்கு துணை அணித்தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
ரஹானே இப்போது ஏறக்குறைய மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார். விளையாட்டிலும் ரஹானே மெச்சத்தகுந்த வகையில் ஆடி வருகிறார். எனவே துணை அணித்தலைவர் பொறுப்புக்கான வாய்ப்பில் ரஹானே தான் முன்னணியில் இருக்கிறார். அதே நேரத்தில் சீனியர் வீரரான அஸ்வினையும் விட்டுவிட முடியாது என்று கூறியுள்ளார்.
சிட்னியில் வருகிற 6ம் திகதி தொடங்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் டோனி விடைபெற்று விட்டதால் விக்கெட் கீப்பர் பணியை விருத்திமான் சஹா கவனிப்பார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பார்மில் இல்லாமல் தவிப்பதால் அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top