இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்றை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவருமான மைக் ஹஸ்ஸி பெயரை டோனி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கேரி கர்ஸ்டன் எப்படி பணியாற்றினாரோ அதேபோன்று சிறப்பாக ஹஸி பணியாற்றிவார் என்றும், முரளி விஜய்யின் கிரிக்கெட் ஆட்டம் வேறு ஒரு தளத்திற்கு எழுச்சியுறக் ஹஸி தான் காரணம் எனவும் டோனி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது நடந்த சம்பவங்கள் மூத்த வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், மற்றொரு அவுஸ்திரேலிய பயிற்சியாளரை பிசிசிஐ நியமிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment