கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட QZ8501 ஏர் ஏசிய விமான விபத்தே உலகளவில் இன்னும் ஓயாத ஆலைகளாய் இருக்கும் நிலையில், மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது அந்நிறுவனத்திற்கு பேரதிர்ச்சியாய் உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலாவிலிருந்து(Manilla) 159 பயணிகளுடன் பானே(Banea) தீவில் உள்ள கலிபோவுக்கு(Kalibo) A320 என்ற விமானம் நேற்று புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலிபோ விமான நிலையத்தில் குறிப்பிட்ட ஓடுதளத்தில்(runway) விமானத்தை தரையிறக்கும்போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியுள்ளது.
இதனால் ஓடுதளத்தை தாண்டி புல்வெளியில் விமானம் பாய்ந்துள்ளது. அப்போது உள்ளே இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறி அழத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.