↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தமிழில் சீனி, சண்டமாருதம் படங்களில் நடித்து வரும் ஓவியா, இந்தியில் ஷக்யு சர்பிரா, ஜட் த ஸ்டோரி ஆப் ரிவென்ஞ் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஓவியாவைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை தனக்கென ஒரு கமர்சியல் வட்டத்தை உருவாக்காத நிலையில், இந்தி சினிமாவில் தனக்கு சான்ஸ் கிடைத்திருப்பதால் அதிக உற்சாகத்தில் உள்ளார்.

இதுபற்றி ஓவியா கூறுகையில், இந்தியில் இரண்டு படங்களிலுமே நடித்து விட்டேன். அதோடு, எனது பர்பாமென்ஸ் மட்டுமின்றி பாடிலாங்குவேஜையும் மாற்றியிருக்கிறேன். அதனால் அந்த படங்களில் என்னைப்பார்க்கும் தென்னிந்திய ரசிகர்கள் இன்ப அதிர்சசியடைவார்கள். அந்த அளவுக்கு புதுமையான கெட்டப்பில் நடித்துள்ளேன்.

மேலும், நான் மலையாளப் படங்களில் நடிப்பதற்கு முன்பிருந்தே மேடையில் நடனமாடுவேன். அதோடு வெளிநாடுகளிலும் நடன நிகழ்ச்சிகளில் ஆடி கைதட்டல் பெற்றிருக்கிறேன். இருப்பினும், சினிமாவில் எனது நடனத்திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு சரியான மூவ்மெண்டுகள் கொண்ட பாடல்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

அதேசமயம். இந்தியில் என்னை வித்தியாசப்படுத்தும் கேரக்டர் மட்டுமின்றி நடனமாடும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அதனால் அதிக ஈடுபாடு காட்டி அந்த படங்களில் நடித்தேன். அதேபோல் இப்போது நான் தமிழில் சரத்குமாருடன் நடித்துள்ள சண்டமாருதம் படத்திலும் அதிரடியான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அது கிட்டத்தட்ட அயிட்டம் நடிகைகள் ஆடுவதுபோல் இருக்கும். இன்றைய ரசிகர்களின் ரசனை மனதில் கொண்டு இப்படி மாறியிருக்கிறேன் என்று கூறும் ஓவியா, முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆடுவதற்கு தயாராக உள்ளாராம்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top