↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
படம் பிடிக்காவிட்டால் பார்க்க வேண்டாம். அநாவசியமாக வழக்குத் தொடர்வதையும் மதச் சாயம் பூசுவதையும் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி இந்திப் படமான பீகே-வை தடை செய்ய இந்து அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பீகே திரைப்படத்திறகு தடை விதிக்க மறுத்து விட்டது. இது குறித்து தலைமை நீதிபதி லோதே கூறுகையில், "உங்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் பார்க்க வேண்டாம். மதங்களின் முகங்களை இங்கு கொண்டுவர வேண்டாம்," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "இவையெல்லாம் பொழுதுபோக்கு விஷயங்கள், நீங்கள் இவற்றை தடை செய்தால், இது மற்றவர்களையும் பாதிக்கும். எல்லாம் இணையதளமயமாகிவிட்ட பிறகு நீங்கள் என்ன மறைக்க முடியும்? இந்திய சமூகம் பக்குவமடைந்துவிட்டது. பொழுதுபோக்குக்கும் மற்ற சீரியஸான விஷயங்களுக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்," என்றார்.
Home
»
amir
»
cinema
»
cinema.tamil
» படம் பிடிக்கலையா.. பார்க்காதீங்க!- பீகே படத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment