இந்நிலையில் ஜாவா கடலில் இருந்து இதுவரை ஒரு விமான பணிப்பெண் உள்பட 50க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வானிலை அப்பகுதியில் சரியில்லாததால் மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விமான போக்குவரத்து நிபுணர் ஜெப்ரீ தாமஸ் அவுஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பயணிகளின் உடல்கள் விமானத்திற்குள் தான் இருக்க வேண்டும். விமானத்தின் உடைந்த உடற்பகுதி வழியாக வெளியே வந்த உடல்கள் தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
விமானம் மோசமான வானிலையை எதிர்கொண்டதால் பயணிகள் நிச்சயம் சீட் பெல்ட் அணிந்திருப்பார்கள். அதனால் பல பயணிகளின் உடல்கள் அவரவர் இருக்கையில் தான் இருக்கும் என பேட்டியளித்துள்ளார்.
0 comments:
Post a Comment