↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
gowtham-600x300
‘என்னமோ ஏதோ’ படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக், ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘வை ராஜா வை’ படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ‘இந்திரஜித்’ படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகவுள்ளது.
ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் ‘இந்திரஜித்’ படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக சோனாரிக்கா படோரியா நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக சுதன்சு பாண்டே நடிக்கிறார். இவர் அஜீத் நடிப்பில் வெளிவந்த ‘பில்லா-2’ படத்தில் வில்லனாக நடித்தவர். இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் மகன் கலா பிரபு இயக்கி வருகிறார். சங்கர் எசன் லாய் இசையமைக்கும் இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவை செய்து வருகிறார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு பாடல்களும் முக்கியமான ஒரு சண்டைக்காட்சியும் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிரபூஞ்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டிரைலரை 2 அல்லது 3 வாரங்களில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top