↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
siva11-600x300
நல்லா பண்ணியிருக்கீங்க சிவா என்று காக்கி சட்டை படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனைப் பாராட்டி இருக்கிறார் தனுஷ். தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவருக்கும் மோதல், சிவகார்த்திகேயனைப் பார்த்தவுடன் தனுஷ் எழுந்து போய்விட்டார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், தனுஷ் – சிவகார்த்திகேயன் நட்பில் முதிர்ச்சியே… விரிசல் அல்ல என்று அவர்களது நண்பர் அனிருத் விளக்கம் தந்தார். தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘காக்கி சட்டை’ இப்படம் சிலதினங்களுக்கு முன் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டி இருக்கிறார் தனுஷ். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறியிருப்பது:
‘காக்கி சட்டை’ பார்த்துவிட்டு நல்லா பண்ணியிருக்கீங்க சிவா, நடிப்பில் நிறைய முன்னேற்றங்கள் இருக்கிறது என்று தனுஷ் சார் பாராட்டினார். ‘எதிர் நீச்சல்’ படத்துக்குப் பிறகு இப்போது தான் என் படத்தை பார்க்கிறார் தனுஷ்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top