ஆடுகளம், ஈரம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில். தற்போது விசாரணை உள்ளிட்ட பல்வேறு படங்களின் எடிட்டர் கிஷோர் தமிழ்சினிமாவில் மிக முக்கியமானவர். தேசிய விருது பெற்றவரும் கூட!
‘விசாரணை’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாராம். உடனடியாக அவரை சென்னை வடபழனி விஜயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அவரது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர்கள் தலையில் ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் நினைவு திரும்பும் என்று கூறியநிலையில், அவர் இன்னும் நினைவு திரும்பாமலே இருக்கிறார்.
இந்த அதிர்ச்சியிலேயே கிஷோரின் அப்பாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயிருக்கு போராடி வரும் கிஷோரை இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட சிலர் மட்டுமே உடனிருந்து கவனித்து வருவதாக கவலைப்படுகிறது அவரது நண்பர்கள் வட்டாரம். கிஷோர் பணி செய்த படங்கள், பணி செய்து கொண்டிருக்கும் படங்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வந்திருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் யாரும் வரவில்லையே என்று கவலைப்படுகிறார்கள் அவரது நண்பர்கள்.
இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக்.
எடிட்டர் லெனினிடம் வசந்தபாலன் உதவியாளராக வேலை பார்த்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. அது ஒரு மணிரத்னம் படம். இரவு பகல் பாராமல் எடிட்டிங் அறையிலேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தவருக்கு திடீரென கண்பார்வை மங்கி ஒரு நிமிஷத்தில் கண்ணே தெரியாமல் போனது. பதறிப்போன உதவியாளர்கள் அவரை விஜயா மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். செய்தியை கேள்விப்பட்டு ஓடோடி வந்த மணிரத்னம், எல்லா செலவுகளையும் தானே ஏற்றுக் கொண்டதுடன், அவரது அருகிலேயே உட்கார்ந்துவிட்டார். பல மணி நேரம் அங்கேயே இருந்து வசந்தபாலனின் கண்பார்வை சரியான பின்புதான் மருத்துவமனையிலிருந்தே வெளியேறியதாக கூறுகிறார்கள்.
இங்கே கிஷோர் நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. அவர் மீண்டும் பூரண உடல் நலத்துடன் வர திரையுலகமும், ரசிகர்களும் பிரார்த்திப்பார்கள். அதே நேரத்தில் எந்நேரமும் பணிச்சுமையோடு காலம் கழிக்கும் சக டெக்னீஷியன்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.