↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாலிவுட்டில் மீண்டும் கால் பதிக்க போகிறாரா அஜித்? - Cineulagam
அஜித் சில வருடங்களுக்கு முன் அசோகா என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் பின் தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகராகி விட்டார்.
இதை தொடர்ந்து தூம் பட வரிசையில் இவர் நடிக்க போகிறார் என்று சில வதந்திகள் வந்து செல்லும். தற்போது வந்த தகவலின் படி மங்காத்தா படத்தை ஹிந்தியில் எடுக்க தீவிர முயற்சி நடந்து வருகிறதாம்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான் இப்படத்தை பாலிவுட்டில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ‘மங்காத்தா பாலிவுட் ரீமேக் சாத்தியம் என்றால் அஜித் இப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தை ஏற்பார்’ என்று ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top