↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஐ 50, என்னை அறிந்தால் 25, தற்போதைய வசூல் நிலைமை என்ன? - Cineulagam

இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆரம்பம் முதலே செம்ம விருந்து தான். ஷங்கரின் பிரமாண்டப்படமான ஐ திரைப்படம் பொங்கலுக்கு வந்தது.

இதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதில் ஐ திரைப்படம் தமிழகத்தில் 500 திரையரங்குகளில் வெளிவந்து தற்போது 60 திரையரங்குகளில் 50 நாளை கடக்கிறது. அதேபோல் 500 திரையரங்குகளில் வெளிவந்த என்னை அறிந்தால் சுமார் 300 திரையரங்குகளில் 25 நாளை கடக்கிறது.

விக்ரமின் ஐ தற்போது வரை ரூ 205 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், என்னை அறிந்தால் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாகவும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களால் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top