↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உத்தம வில்லன் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகளுக்காக தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், உத்தம் வில்லன் படத்தின் பணிகள் குறித்து அங்கிருந்தவாறே சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாரமவுண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் உத்தமவில்லன் படத்தின் இசை சம்பந்தப்பட்ட பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் படத்தின் டிரைலரும் தயாராகிவிட்டதாகவும், மிகவிரைவில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கிய உத்தம வில்லன் படத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, பார்வதி நாயர், ஊர்வசி மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top