↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கிய "அரிமா நம்பி" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழில் விக்ரம் பிரபு நடித்த வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்க இந்த படத்தை தேவ கட்டா இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழில் ப்ரியா ஆனந்த் நடித்த வேடத்தில் ப்ரணிதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு மற்றும் ப்ரணிதாவின் கெமிஸ்ட்ரி அற்புதமாக இருக்கும் என தனக்கு தோன்றியதாகவும், அதனால் இருவரையும் ஒப்பந்தம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் தற்போது ப்ரணிதா இணைந்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top