↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
shruti-600x300
டாப் ஹீரோயின்களின் போட்டி நடிகைகள் வரிசையில் இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். சமீபகாலமாக அவர் குத்து பாடல்களுக்கு ஆடுவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து இதேபோல் குத்து பாடல்களுக்கு மட்டும் ஆடினால் குத்து பாடல் நடிகைகள் பட்டியலில் அவரை சேர்த்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் கமென்ட் வெளியிடுகின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘ஆகடு‘ படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடிய ஸ்ருதி அடுத்து பாலிவுட் படமான ‘தெவர்Õ படத்தில் ஆடினார். இது தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்காக உருவானது.
இதையடுத்து ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘சைஸ் ஜீரோ‘ தமிழ், தெலுங்கு படத்தில் ஸ்ருதி குத்து பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை பிரகாஷ் கோவெல்முடி இயக்குகிறார். மீண்டும் ஸ்ருதி குத்து பாடலுக்கு நடனம் ஆடுவதா என்று அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இந்த விஷயம் ஸ்ருதியின் காதுக்கு சென்றது.
அதைக்கேட்டு அப்செட் ஆனவர், ‘சைஸ் ஜீரோ படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். அதை ஏன் குத்து பாடலுக்கு ஆடுவதாக குறிப்பிடுகிறார்கள்’ என கோபமாக கேட்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top